காப்பியத்தமிழ்
சிலப்பதிகாரம்
பறை அறைந்தனர்
*சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்; இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும், உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்" என, யானை எருத்தத்து, அணிமுரசு இரீஇக்
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியும் கேள் நீ;
'சிறைக் கோட்டங்களைத் திறந்துவிடுங்கள்: எவ்வாறும் கறைப்பட்ட மாக்கள் இருந்தால் அவர் கறைகளைப் பொறுத்து விடுதலை செய்யுங்கள்" என உத்தரவிட்டான் 'இடு பொருளா யினும் (புதையல்) படுபொருளாயினும் (முயற்சியால் தேடிய பொருள்), அவை உற்றவர்க்கும் உறுதி பெற்றவர்க்குமே சொந்த மாகும் என, யானைப் பிடரியிலே அணிபுனைந்த முரசினை இருத்தித் தன் கோன்முறையாக எங்கணும் முரசமும் அறை வித்தான், கொற்றவேந்தனான பாண்டியன் அவனே, தான் இப் போதிலே முறைபிழைத்த அந் நிலையினையும் இனி நீ கேட்பாயாக
சொல்
Super
ReplyDelete